Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / கோத்தபாய உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கோத்தபாய உட்பட 7 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை ஜனவரி மாதம் 11 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

​டீ.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது குறித்த வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் சில இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என்று பிரதிவாதிகள் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் அலி சப்ரி நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

பிரதிவாதிகள் கேட்டுள்ள ஆவணங்களை உடனடியாக அவர்களுக்கு வழங்குமாறும் குறித்த ஆவணங்கள் உரிய முறையில் வழங்கப்பட்டனவா என்பது தொடர்பில் விசாரணை செய்ய குறித்த வழக்கை 11 ஆம் திகதி ஒத்துவைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றை வழக்கிற்கு பிரதிவாதியான கோட்டாபய ராஜபக்ஸ சமூகமளிக்கவில்லை எனவும் கடந்த வழங்கின் போது வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் அவர் வெ ளிநாடு சென்றுள்ளதாகவும் பிரதிவாதிகள் சார்ப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஏனைய பிரதிவாதிகளாக நில மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் பிரசாத் ஹர்ஷன டி சில்வா மற்றும் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான பத்ரவதி கமலதாச, சுதம்மிகா ஆட்டிகல்ல, சமன் குமார கலாபத்தி, டி. மெண்டிஸ் சலிய மற்றும் மல்லிகா குமாரி சேனதீர ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …