Thursday , May 9 2019
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / யாழ். மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு புதிய தீர்வு

யாழ். மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு புதிய தீர்வு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

யாழ். மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கீழ் பாளியாறு நீர்த்தேக்கத்தை நீர்மாணிக்கவுள்ளதாக தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மற்றும் வட. மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் 60 ஆயிரம் பேர் வரையிலான மக்கள் நிலக்கீழ் நீரின் மூலமாக தமது நாளாந்த தேவைகளை நிறைவேற்றி வருகிறார்கள்.

இந்த நிலக்கீழ் நீர் எதிர்வரும் 10 முதல் 20 வருட காலத்திற்கு மாத்திரமே போதுமானதாக இருக்குமென ஆய்வில் தெரிய வந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார்.

எனவே, எந்தவித பிரயோசனமும் இன்றி கடலில் கலக்கும் நீரை, கீழ் பாளியாறு நீர்த்தேக்கத்தில் சேமித்து வைக்கமுடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் வவுனிக்குளம், கொள்ளவிளான்குளம், அடம்பன்குளம், மல்லாவிகுளம் போன்றவை சார்ந்த பிரதேசங்கள் அனுகூலம் பெறும். இந்தத் திட்டத்திற்கான செலவீனம் 350 கோடி ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது.

  • 3
    Shares

Check Also

இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய ராசிபலன் 09.05.2019

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!மேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வாகனத்தை …

error: Content is protected!