Thursday , March 28 2024
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / பொசனை முன்னிட்டு அனுராதபுரத்தில் 8000 படையினர்!

பொசனை முன்னிட்டு அனுராதபுரத்தில் 8000 படையினர்!

பொசன் தினத்தை முன்னிட்டு அனுராதபுரத்தில் 8000 ஆயிரம் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இத்தகவலை அனுராதபுர வலைய பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

பொசனை முன்னிட்டு அனுராதபுரம் நான்கு வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றின் பாதுகாப்பிற்காக 4000 பொலிஸார், 2000 இராணுவத்தினர், 1000 சிவில் பாதுகாப்பு படையினர், புலனாய்வு அதிகாரிகள், கடற்படையினர் உள்ளடங்கலாக 8000 பேர் கடமையில் ஈடுபடவுள்ளதாகவு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் புனித பூமி மற்றும் குட்டம் பொகுண ஆகியன ஒரு பகுதி வலையமாகவும், மிஹிந்தலை உள்ளிட்ட பகுதி ஒரு வலையமாகவும், விஜிதபுர பகுதி ஒரு வலையமாகவும் , அவ்கன விஜிதபுர தொகுதி ஒருவலையமாகவும், தந்திரிமலை, ரஜமஹாவிகாரை உள்ளிட்ட பகுதிகள் ஒருவலையமாக பிரிக்கப்பட்டு, விசேடசோதனைசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்கள் தேவையான பொருட்களை மாத்திரமே எடுத்து வரவேண்டும் என்றும், அவர் கூறியுள்ளார்.

மேலும் பொசன் வலையங்களில் குறிப்பிட்ட வாகனத்தரிப்பிடங்களில் மாத்திரமே வாகனங்களை நிறுத்த முடியும் என்றும், ஏனைய இடங்களில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து நெரிசல்களை ஏற்படுத்தும் வாகன சாரதிகளுக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனுராதபுர வலைய பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

வீடு தேடி வருகிறது..

தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவரை CCTV கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்டு செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இத்திட்டத்தின் …