Tuesday , April 16 2024
Home / செய்திகள் / இந்தியா செய்திகள் / வட மாநிலங்களை புரட்டியெடுத்த புழுதி புயல் – உ.பி.யில் 42 பேர் பரிதாப பலி

வட மாநிலங்களை புரட்டியெடுத்த புழுதி புயல் – உ.பி.யில் 42 பேர் பரிதாப பலி

வடமாநிலங்களான ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரக்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களை நேற்று இரவு புழுதி புயல் புரட்டி எடுத்தது. இதில் ராஜஸ்தானில் மட்டும் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாலைகளில் சரிந்துள்ளன. மேலும் சில இடங்களில் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புழுதி புயலில் சிக்கி 42 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது, ஏராளாமானோர் காயமடைந்துள்ளனர். குறிப்பாக ஆக்ரா மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டது. அங்கும் மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர். பிஜினோர், பெய்ரெலி மற்றும் ஷாரன்பூர் மாவட்டங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரைவில் மீட்பு பணி நடைபெற உத்தவிட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்திலும் புழுதி புயல் தாக்கியது. இதில் சிக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் நேற்று இரவு ஏற்பட்ட புழுதி புயலினால் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv