Saturday , April 13 2024
Home / விளையாட்டு செய்திகள் / புரோ கூடைப்பந்து போட்டி: பெங்களூரு உட்பட 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

புரோ கூடைப்பந்து போட்டி: பெங்களூரு உட்பட 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

புரோ கூடைப்பந்து போட்டி: பெங்களூரு உட்பட 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழக உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் யுபிஏ புரோ கூடைப் பந்து போட்டியில் மும்பை, புனே, பஞ்சாப், பெங்களூரு ஆகிய நான்கு அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெற்றன.

ஏற்கெனவே மும்பை, புனே பஞ்சாப் ஆகிய அணிகள் தகுதி பெற்றிருந்த நிலையில் நேற்று கடைசி கால் இறுதி போட்டியில் பெங்களுரூ அணி 116-113 என்ற புள்ளிக் கணக்கில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியையொட்டி நடை பெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந் தினராக கலந்து கொண்ட நடிகர் சூர்யா யுபிஏ புரோ கூடைபந்து தொடருக்கான கோப்பையை அறிமுகம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் மரிய ஜீனா ஜான்சன், பல்கலைகழக துணைத் தலைவர் மேரி ஜான்சன் மற்றும் யுபிஏ நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரை இறுதி ஆட் டங்கள் வரும் வரும் 10-ம் தேதி கோவாவில் நடை பெறுகிறது. இதை தொடர்ந்து 16-ம் தேதி இறுதி போட்டி நடத்தப்படுகிறது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நேற்று வண்ண வண்ண நிகழ்ச்சிகளுக்கு பின்னர் தொடங்கியது. முதல் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு …